உள்ளூர் செய்திகள்

நிலக்கடலை பயிருக்கு காப்பீடு செய்ய 31 -ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-12-28 09:34 GMT   |   Update On 2022-12-28 09:34 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில் 2023 -ம் ஆண்டு ரபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அந்த பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.
  • பிரிமிய தொகை ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு 311.22 ரூபாய் ஆகும். கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

நாமக்கல் மாவட்டத்தில் 2023 -ம் ஆண்டு ரபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அந்த பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.

பிரிமிய தொகை ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு 311.22 ரூபாய் ஆகும். கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பகுதி நகல் , ஆதார் அட்டை நகல் மற்றும் செல்சிபோன் எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமியம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News