உள்ளூர் செய்திகள்

தமிழக பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க வேண்டும் - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோரிக்கை

Published On 2023-06-21 09:16 GMT   |   Update On 2023-06-21 09:16 GMT
  • பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் யோகா பயிற்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
  • தினமும் 30 நிமிடம் யோகா செய்வதை கட்டாயமாக்க பட வேண்டும்.

கோவை,

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக உக்கடம் பெரியகுளம் அருகே, பா.ஜ.க சார்பில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, சுதாகர்ரெட்டி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உள்பட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். அப்போது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் யோகா பயிற்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்று உள்ளது. சர்வதேச நாடுகளும் யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

இதன் மூலம் லட்சக்கணக்கான யோகா ஆசிரியர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வருகிறது. யோகா கலையின் மூலம் இந்தியா உலகத்திற்கே ஆரோக்கியத்திற்கான கொடையை வழங்கி உள்ளது

.

கோவை மாநகராட்சி நிர்வாகம் பூங்காக்களில் யோகா செய்ய தனி இடம் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும். இது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. ஆரோக்கியம் தொடர்பானது.

யோகா செய்வதால் மாணவர்களின் மன அழுத்தம் குறைந்து, வழி தவறி செல்வது போன்ற அம்சங்களில் இருந்து விடுபட முடியும். தினமும் 30 நிமிடம் யோகா செய்வதை கட்டாயமாக்க பட வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி ஆபரேஷன் முடிந்து பூரண குணமாக வேண்டும். அதற்காக என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News