உள்ளூர் செய்திகள்

கோர்ட்டு வளாகத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

வேடசந்தூர் கோர்ட்டில் அனைவருக்கும் யோகா பயிற்சி

Published On 2022-06-21 11:41 IST   |   Update On 2022-06-21 11:41:00 IST
  • வேடசந்தூரில் நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
  • இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேடசந்தூர் :

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.

யோகா பயிற்சியாளர் கமலக்கண்ணன் தலைமையில், சார்பு நீதிபதி சரவணகுமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வாஞ்சிநாதன், கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி சசிகலா, வேடசந்தூர் வக்கீல்கள் சங்க செயலாளர் தங்கவேல் முனியப்பன், செல்வகுமார், மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News