உள்ளூர் செய்திகள்

ஏற்காடு, ஆத்தூரில் கனமழை

Published On 2022-06-07 10:23 GMT   |   Update On 2022-06-07 10:23 GMT
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, ஆத்தூர் பகுதுகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. மழை, இடிமின்னல்

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

ஏற்காட்டில் பெய்த மழையால் குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 20 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆத்தூர் 19, கெங்கவல்லி 14, பெத்தநாயக்கன்பாளையம் 11, சேலம் 10.6, தம்மம்பட்டி 7,சங்ககிரி 4, வீரகனூர், எடப்பாடி, கரியகோவில் பகுதிகளில் தலா 2, காடையாம்பட்டி, ஓமலூர், ஆனை–மடுவு ஆகிய பகுதிகளில் தலா 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 93.6 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News