உள்ளூர் செய்திகள்

கடலூர் புனித வளனார் பள்ளியில் கிராம நிர்வாக உதவியாளர் எழுத்து தேர்வு நடந்தது.

கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு

Published On 2022-12-04 08:31 GMT   |   Update On 2022-12-04 08:31 GMT
  • கடலூர் மாவட்டத்தில் இன்று கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது.
  • தேர்வர்களை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதித்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் இன்று கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 10 தாலுக்காவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை வருவாய் துறை அதிகாரிகள் செய்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி உள்ளிட்ட 10 தாலுக்காவில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுத ஆயிரக்கணக்கான நபர்கள் விண்ணப்பித்தனர். இதில் 12 ஆயிரத்து 510 பேர் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதினர்.

இன்று காலை 9.30 மணிக்குள் வருகை தந்த தேர்வர்களை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதித்தனர். பின்னர் காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு 11 மணிக்கு முடிந்தது இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் முழுவதும் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் தேர்வு மையங்களில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News