உள்ளூர் செய்திகள்

ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை.

உலகின் மிகப்பெரிய 23 அடி உயர நடராஜர் சிலை

Published On 2022-09-13 15:26 IST   |   Update On 2022-09-13 15:26:00 IST
  • சிற்பங்களும் அதன் மேல் சிவ அச்சரங்கள், தீச்சுடர்கள் கொண்டு அமைக்கப்பட்டு கலை நயத்துடன் கொண்டதாக திட்டமிட்டப்பட்டது.
  • 23 அடி உயரமும், 17 அடி அகலமும், சுமார் 15,000 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய ஆனந்த தாண்டவ நடராஜர் சிலையாக உருவானது.

சுவாமிமலை:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திம்மக்குடி கிராமத்தில், கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற சிற்பச்சாலையை சேர்ந்தவர் வரதராஜன்.

இவர் இந்திய அரசின் ஆர்டரின் பெயரில், கடந்த 2003ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்திற்கு சோழர் காலத்து சிற்ப சிலைகளைப் போல் வடிவமைத்து 11 அடி உயரம் கொண்ட நடராஜ சிலையை தயாரித்து வழங்கி உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2010 ஆண்டு 23 அடி நடராஜர் ஐம்பொன் விக்ரஹம் ஆரம்பிக்பெற்று ஒற்றை வார்ப்பு முறையில் உருவாக்கப் பெற்றுள்ளது.

அதன் திருவாச்சில் பூதகணங்கள், சிம்மம், பாம்பு போன்ற சிற்பங்களும் அதன் மேல் சிவ அச்சரங்கள், தீச்சுடர்கள் கொண்டு அமைக்கப்பட்டு கலை நயத்துடன் கொண்டதாக திட்டமிட்டப்பட்டது.

பின்னர் பத்து ஆண்டு களுக்கு மேல் நடைபெற்ற பணி நிறைவடைந்து 23 அடி உயரமும் 17 அடி அகலமும் சுமார் 15,000 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய ஆனந்த தாண்டவ நடராஜர் சிலையாக உருவானது.

இச்சிலையில் 51 சிவ அட்சரத்தை குறிக்கும் வகையில், 51 தீச்சுடர்கள், திருவாச்சியில் 52 சிம்மங்களையும்,56 பூதகணங்களையும்,102 தாமரை மலர்களையும்,2 மகர பறவைகளையும், 34 நாகங்களின் உருவங்களையும் கொண்டுள்ளதாக அமைந்து ள்ளது.

இச்சிலை திம்மங்குடியில் பன்னிரு திருமுறையை ஓதுவார்கள் பாடலை பாடி, சிவகான பூதணநாதர் கைலை வாத்தியங்கள் முழங்க, நடராஜருக்கு அபிஷேகம், தீபாதரனை காண்பிக்கப்பட்டு, வேலுார் நாராயணி பீடத்தின் டிரஸ்டி சுரேஷிடம், தெலுஉலகின் மிகப்பெரிய 23 அடி உயர நடராஜர் சிலைங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்படைத்தார்.

இதில் சிற்பி ராஜன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

Tags:    

Similar News