உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் உலக தொழிற்சங்க சம்மேளன அமைப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது.

உலக தொழிற்சங்க அமைப்பு நாள் உறுதியேற்பு

Published On 2022-10-05 09:57 GMT   |   Update On 2022-10-05 09:57 GMT
  • உலக தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம்.
  • உணவு, குடிநீர், இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட வேண்டும்.

தஞ்சாவூர்:

இரண்டாம் உலகப்போருக்கு பின்பு கடந்த 1945 ஆம் ஆண்டு உலக தொழிற்சங்க அமைப்பு பாரீஸ் நகரத்தில் உருவாக்கப்பட்டது.

நாடுகளை அடிமைப்படுத்தி, அந்த நாட்டு வளங்களையும் சுரண்டி, மக்களை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலக நாடுகளின் முழுமையில் இருந்தும் தொழிலாளர்களை, மக்களை பாதுகாக்க வேண்டி உலகத் தொழிற்சங்க சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.

அதன் அமைப்பு தினம் தஞ்சாவூரில் கடைபிடிக்கப்பட்டது.

அனைத்து தொழிற்ச ங்கங்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் சந்திரகுமார் , தொ.மு.ச மாவட்ட செயலாளர் சேவியர், ஐ.என்.டி.யூ.சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஏ. ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவருக்கும் உணவு, குடிநீர், இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட வேண்டும், உலகத் தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.

இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் துரை. மதிவாணன், ரவி, கோவிந்தராஜ், சேவையா, தாமரைச் செல்வன், ராஜா கோபால், வீரையன், செல்வம், மணிவாசகன், பாரதிதாசன், மருதவாணன், ராஜு , பன்னீர்செல்வம், சுரேந்தர், சிவானந்தம், செல்வம், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News