உள்ளூர் செய்திகள்

கோவையில் விபத்தில் தொழிலாளி பலி

Published On 2022-11-11 14:51 IST   |   Update On 2022-11-11 14:51:00 IST
  • கோபால கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் காளப்பட்டி- கோவில்பாளையம் ரோட்டில் சென்றார்.
  • லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் வந்த கோபால கிருஷ்ணன் மீது மோதியது.

கோவை,

கோவை சரவணம்பட்டி பெருமால் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 40). தொழிலாளி.சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் காளப்பட்டி- கோவில்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் வந்த கோபால கிருஷ்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News