உள்ளூர் செய்திகள்

சாலையில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு வாகனத்தை படத்தில் காணலாம்.

சரக்கு வாகனம் கவிழ்ந்து தொழிலாளி பலி

Published On 2023-01-04 16:01 IST   |   Update On 2023-01-04 16:01:00 IST
  • முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்தது.
  • கூலி தொழிலாளி நாராயணன் (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து பழங்கள் ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்றிரவு சென்னையை நோக்கி சென்று கொண்டு இருந்தது.

அதில் ஒட்டுனர் மற்றும் 5 கூலி தொழிலாளிகள் பயணித்து வந்தனர். சின்னார் பகுதிக்கு வந்தபோது சரக்கு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் மினிலாரியின் மேல்பகுதியில் அமர்ந்து பயணம் செய்த சென்னை மாதவரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நாராயணன் (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயம் அடைந்த மேலும் 5 பேரை சூளகிரி போலீசார் மீட்டு அவர்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நாராயணனின் உடலை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்

.


Tags:    

Similar News