உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2022-10-27 13:51 IST   |   Update On 2022-10-27 13:51:00 IST
  • தியாகதுருகம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
  • தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி, அக்.27-

தியாகதுருகம் அருகே நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் (வயது 38) கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததார். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். இதுகுறித்து வரஞசரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News