மகளிர் தின விழா நடந்த போது எடுத்த படம்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் தினவிழா
- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் பல்டாக்டர் தி.ரேணுகா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். விலங்கியல்துறை பேராசிரியை வசுமதி, மகளிர் தினம் குறித்து பேசினார். இவ்விழாவில் பல்டாக்டர் தி.ரேணுகா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், பெண்கள் சாதனை படைத்து வாழ்வில் முன்னேறி நற்பெயரை பெற்றோருக்கு எடுத்து கொடுக்க வேண்டும். சமூகவலைதளத்தில் பல்வேறு அபாயங்கள் இருக்கிறது. இவற்றை கையாளும் போது பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும், என்றார். முன்னதாக மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தஜோதி வரவேற்று பேசினார். மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், முதுகலை மாணவிகள் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறை பேராசிரியை சாந்தி நன்றி கூறினார். தொடர்ந்து முதுகலை மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை முதுகலை மாணவிகள் செய்திருந்தனர்.