உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.


வி.கே.புதூர் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

Published On 2022-12-27 09:07 GMT   |   Update On 2022-12-27 09:07 GMT
  • கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் அதிசயபுரம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • கலெக்டர் அலுவலகத்தில் அதிசயபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தென்காசி:

வீர கேரளம் புதூர் அருகே உள்ள ராஜகோபால பேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அதிசயபுரம் கிராமத்தில் புதிதாக அரசு சார்பில் டாஸ்மாக் கடை திறக்கப்பட இருப்பதாகவும். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறி கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் அதிசயபுரம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதியில் இந்து மற்றும் கிறிஸ்தவ கோவில்கள் உள்ளது எனவும் அதனை திறக்க அனுமதி வழங்கக் கூடாது எனவும் கூறி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் அதிசயபுரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பின்னர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். இப்போராட்டத்தில் ராஜகோபால பேரி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணி, இந்திய நாடார்கள் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவர் அகரக் கட்டு லூர்து நாடார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கிருபாகரன்,தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News