உள்ளூர் செய்திகள்
மரத்தில் இருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி சாவு
- ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
- மரத்தில் ஏறி தலைகள் வெட்டும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி அருகே உள்ள தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி தேவியம்மா (வயது 57). இவர் அதே பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று ஆட்டுக்காக மரத்தில் ஏறி தலைகள் வெட்டும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது செல்லும் வழியிலேயே லட்சுமி தேவியம்மா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.