உள்ளூர் செய்திகள்
- கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- மன வேதனையில் இருந்த அமுதா வீட்டில் யாரும் இல்லாத போது மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள நடுப்பையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதன். இவரது மனைவி அமுதா (வயது30). இருவருக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளது.
கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மன வேதனையில் இருந்த அமுதா வீட்டில் யாரும் இல்லாத போது மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அமுதா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.