உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
- பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
- அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கலா பரிதாபமாக இறந்தார்.
பள்ளிப்பாளையம்:
பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கலா (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சத்யா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் திடீரென சாலையில் நடந்து சென்ற கலா மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த கலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கலா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.