விபத்தில் சிக்கிய கார் நொறுங்கி கிடக்கும் காட்சி.
வானூர் அருகேலாரி மீது கார் மோதி பெண் பலி: 3 பேர் படுகாயம்
- ஜீனத் பி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்
- தூக்க கலக்கத்தில் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
விழுப்புரம்:
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வர் அப்பாஸ் அன்சாரி. இவரது மனைவி ஜீனத் பி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ஆந்திர மாநிலத்தில் இருந்து அப்பாஸ் அன்சாரி தனது மனைவி ஜீனத் பீ மற்றும் மகன் முகமது சூர்யா,மகள் பானு பேரகுழந்தை நூமான் ஆகிேயார் காரில் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.
காரை ஜாகிர் உசேன் ஓட்டி வந்தார். இந்த கார் அதிகாலை 4.30 மணி அள வில் ஆரோவில் அருகே வந்து கொண்டிருந்த போது டிரைவரின் தூக்க கலக்கத்தில் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில் அன்சாரி மனைவி ஜீனத் பீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 8 வயது பேரக் குழந்தை மகன், மகள் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சை க்காக ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.இந்த விபத்து குறித்து ஆரோ வில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்