உள்ளூர் செய்திகள்
மதுபான பாட்டில் விற்ற பெண் கைது
- போலீசார் கோ. பவழங்குடி, சந்தனகுப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வீட்டில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் கோ. பவழங்குடி, சந்தனகுப்பம் பகுதி யில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வராசு மனைவி பன்னீர்செல்வி (வயது 55) என்பவர், தனது வீட்டில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட போலீசார் பன்னீர்செல்வியை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.