உள்ளூர் செய்திகள்

தீயிட்டு எரிக்கப்படும் பொருட்களை எரிக்காமல் தூய்மைப்பணியாளா்களிடம் வழங்க வேண்டும்

Published On 2023-01-11 04:11 GMT   |   Update On 2023-01-11 04:11 GMT
  • காங்கயம் நகர பகுதியில் வீடுவீடாக கழிவுகள் சேகரிப்பு சிறப்பு பணி நடைபெற உள்ளது.
  • புகையில்லா போகியை நடைமுறைப்படுத்த காங்கயம் நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

போகிப் பண்டிகையை முன்னிட்டு தீயிட்டு எரிக்கப்படும் பொருட்களை எரிக்காமல் தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குமாறு காங்கயம் நகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜனவரி 14ந் தேதி போகிப் பண்டிகை நாளில் வீடுகளில் இருக்கும் பழையப் பொருட்கள், டயா்கள் மற்றும் பயனில்லாத பொருட்களை தீயில் எரித்து சுகாதார சீா்கேடு ஏற்படுத்தாமல், நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்கவும்.

இதற்காக காங்கயம் நகர பகுதியில் வீடுவீடாக கழிவுகள் சேகரிப்பு சிறப்பு பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக சுகாதார வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வாகனங்கள் மூலம் வீடுவீடாக குப்பை சேகரிக்கும்போது அவா்களிடம் போகிப் பண்டிகைக்காக தீயிட்டுக் கொளுத்த நினைக்கும் பழைய பொருட்களை ஒப்படைத்து இந்த ஆண்டு புகையில்லா போகியை நடைமுறைப்படுத்த காங்கயம் நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News