உள்ளூர் செய்திகள்

திடீரென தோன்றியுள்ள வேகத்தடை.




தென்காசி மாவட்டத்தில் திடீரென முளைக்கும் வேகத்தடைகள் அகற்றப்படுமா?

Published On 2022-08-29 09:39 GMT   |   Update On 2022-08-29 09:39 GMT
  • சிறிய கார்கள் மற்றும் பெரிய கனரக வாகனங்கள் சிரமம் அடைகின்றன.
  • அதனை அகற்ற சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் கிராமத்தில் உள்ள தெருக்களில் எவ்வித அனுமதியும் இல்லாமல் ஒரு சிலர் தாங்களாகவே முன்வந்து வேகத்தடைகள் என்ற பெயரில் ஆபத்தை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தும் வண்ணம் அமைத்து வரும் சுவர் போன்ற வேகத்தடைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற வேகத்தடைகள் தார் சாலைக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களை பயன்படுத்தாமல் மாற்றாக சிமெண்ட் மற்றும் ஜல்லிகளை கொண்டு அமைக்கப்பட்டு வருவதால் அதில் ஏறி இறங்குவதற்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி சிறிய கார்கள் மற்றும் பெரிய கனரக வாகனங்களும் சிரமம் அடைகின்றன.

எனவே இதுபோன்று திடீர் திடீரென முளைத்து வரும் வேகத்தடைகளை அகற்றி வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News