உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் கலெக்டரிடம் புகார் அளிக்கும் வாட்ஸ்-அப், தொலைபேசி எண் மீண்டும் செயல்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

Published On 2023-07-05 14:04 IST   |   Update On 2023-07-05 14:06:00 IST
  • கடந்த சில மாதங்களாக வாட்ஸ்-அப் புகார் எண், தொலைபேசி புகார் எண் இரண்டும் சரிவர செயல்படவில்லை.
  • கலெக்டருக்கு புகார்களை தெரிவிக்கும் வகையில் மீண்டும் புகார் எண்களை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களின் புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிவிப்பதற்கு பதிலாக தனியாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிப்பதற்காக தனியாக புகார் எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் புகார்

அதில் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவித்தவுடன் அதற்கான உரிய பதில் சம்பந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாட்ஸ்-அப் புகார் எண் மற்றும் தொலைபேசி புகார் எண் இரண்டும் சரிவர செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கலெக்டருக்கு புகார்களை தெரிவிக்கும் வகையில் ஏற்கனவே செயல்பட்ட வாட்ஸ்-அப் புகார் மற்றும் தொலைபேசி புகார் எண்களை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News