உள்ளூர் செய்திகள்

வறண்டு கிடக்கும் சடையனேரி குளம்.

உடன்குடி வட்டார பகுதியில் வறண்டு கிடக்கும் குளங்கள் முழுமையாக நிரப்பப்படுமா? - விவசாயிகள் கோரிக்கை

Published On 2023-10-11 08:43 GMT   |   Update On 2023-10-11 08:43 GMT
  • இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து போனால் வேறு எந்த வழியிலாவது தண்ணீர் கொண்டு வந்து அனைத்து குளங்களையும் முழுமை யாக நிரப்ப வேண்டும்.
  • இல்லையெனில் உடன்குடி பகுதியில் விவசாயம் முழுமையாக அழிந்து விடும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட தாங்கை குளம், சடையனேரி குளம், தருவைகுளம், கருமேணிஆறு புதிதாக நிலத்தடி நீர் பிடிப்பு ஏற்படு வதற்காக அய்யனார்குளம், மாநாட்டுக்குளம், பரமன் குறிச்சிகுளம், வெள்ளா ளன்விளை குளம், நரிகுளம் உட்பட ஏராளமான புதிய நீர்பிடிப்புகுளங்கள் மற்றும் தண்ணீர்வரும் கால்வாய்கள் இன்று வரை வறண்ட நிலையில் இருக்கிறது.

ஊரெல்லாம் கொட்டி தீர்க்கும் மழை உடன்குடியை தொடர்ந்து ஒரங்கட்டுகிறது. இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து போனால் வேறு எந்த வழியிலாவது தண்ணீர் கொண்டு வந்து அனைத்து குளங்களையும் முழுமை யாக நிரப்ப வேண்டும்.

இல்லையெனில் உடன்குடி பகுதியில் விவசா யம் முழுமையாக அழிந்து விடும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் குடிதண்ணீரும் இருக்காது என்று வேதனை யுடன் கூறுகின்றனர்.

இதுசம்பந்தமாக விவசாய சங்க பிரதிநிதிகள் பலரிடம் கையொப்பம் வாங்கி பரமன்குறிச்சி பிர்லா போஸ் மூலம் முதல்-அமைச்சர் மற்றும் சம்பந்த ப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News