உள்ளூர் செய்திகள்

கரும்பு பயிர்களை சேதப்படுத்தி காட்டு பன்றிகள் அட்டகாசம்

Published On 2023-01-16 09:05 GMT   |   Update On 2023-01-16 09:05 GMT
  • விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
  • 4 நாட்களுக்கு முன் காட்டுப்பன்றிகள் கூட்டம் நுழைந்தது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் தோலம்பா–ளையம்புதூர், ஆதிமாதையனூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.

இந்த கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு யானை, மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் நுழைந்து பொது–மக்களையும் விவசா–யிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தோலம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்த மயில்சாமி மனைவி முத்தம்மாள் என்பவரின் கரும்பு தோட்டத்திற்குள் கடந்த 4 நாட்களுக்கு முன் காட்டுப்பன்றிகள் கூட்டம் நுழைந்தது.

அப்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களை காட்டு பன்றிகள் கூட்டம் காலால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியது.

இதற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்று வரை இழப்பீட்டு தொகை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்க அரசு அதிகாரிகள் முன் வர வில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

காரமடை வனத்து றையினர் மட்டும் பெயரளவிற்கு வந்து பார்த்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு அரசு அதிகாரிகள் இழப்பீடு வழங்கு முன்வருவதில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News