உள்ளூர் செய்திகள்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டிய அவசியம் என்ன? -முன்னாள் அமைச்சர் கேள்வி

Published On 2022-12-15 09:26 GMT   |   Update On 2022-12-15 09:26 GMT
  • தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • 200.தொகுதிகளுக்கும் மேல் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஓசூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், தி.மு.க. அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப்பெற வலியுறுத்தி யும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர் -மத்திகிரி கூட்டு ரோட்டில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ஹரீஷ் ரெட்டி தலைமை தாங்கினார். துணை செயலாளர் நவீன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் இருக்கும்போது, மகனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டியதன் அவசியம் என்ன?

முதலமைச்சர், ஊடகங் கள் மூலம் விளம்பரம் தேடிக்கொள்கிறாரே தவிர வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை. இதுபோன்ற முதல்வரை தேர்ந்தெடுத்ததற்காக, மக்கள் இன்று கவலைப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்றே தேர்தல் நடைபெற்றாலும், 200.தொகுதிகளுக்கும் மேல் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் மதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் பி.ஆர்.வாசுதேவன், அசோகா,மஞ்சுநாத்,ராஜி, மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News