உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக சென்று சேர வேண்டும்

Published On 2023-06-23 09:20 GMT   |   Update On 2023-06-23 09:20 GMT
  • நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்.
  • வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டயரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார். அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், ஆதிதிராவிட நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா , ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தாட்கோ ஆணையர் கந்தசாமி, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை (மத்திய தொழிற் பணி), மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:-

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்கள் தொகை, முதல்வரின் முகவரி துறையில் இருந்து வரப்பெற்ற மனுக்களின் நிலுவை விவரம், ஆதிதிராவிட நலப் பள்ளியில் எண்ணிக்கை, நான்கு மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விபரம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விபரம், ஆதிதிராவிடர் நல விடுதிக ளின் எண்ணிக்கை, கடந்தாண்டு விடுதிகளில் தங்கி கல்வி பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விவரம், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு பொருளடக்கம் இக்கூட்ட த்தில ஆய்வு செய்யப்பட்டது.

ஆதித்திரா விடர்களின் வாழ்க்கை தரம் உயர பல்வேறு நலத்திட்ட ங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் தங்கு தடையின்றி பயனாளிகளுக்கு சென்று நேர அலுவலர்கள் முனைப்பு டன் செயல்பட வேண்டும்.

மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு தாட்கோ மானியமாக ரூ.1224235 மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.4355786 மதிப்பீட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

மேலும் மகளிருக்கான சுய உதவிக்குழுக்களின் கீழ் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 10 குழுக்களுக்கு 120 மகளிருக்கு தாட்கோ மானியமாக ரூ.2500000 மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.7447000 மதிப்பீட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பயன்பாட்டிற்கென மின் இணைப்பு 25 விவசாயிகளுக்கு தாட்கோ மானியமாக ரூ.5790000 மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.6480000 மதிப்பீ ட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்ப ட்டன.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திர சேகரன் , டி.கே.ஜி.நீலமேகம் , கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்) , ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மற்றும் நான்கு மாவட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News