உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-04-30 09:05 GMT   |   Update On 2023-04-30 09:05 GMT
  • தொழு நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • ரத்த சக்கரை அளவு, ரத்த சோகை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்தனர்.

ஊட்டி,

குன்னூர் கிரேஸ்டிரஸ்ட் காருண்யா டிரஸ்ட்டுடன் இணைந்து தி.மு.க பிரமுகரும், சமூக சேவகருமான கோவர்த்தனன் தலைமையில் தொழு நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், பல்நோக்கு மறு வாழ்வு உதவியாளர் சண்முக மூர்த்தி, குன்னூர் நகர தி.மு.க பொருளாளர் ஜெகநாத் ராவ் மற்றும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி தஸ்தகீர், பால் பரமானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் சீயோன் ரத்தப் பரிசோதனை நிலையம் சார்பில் அதன் நிறுவனர் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் ரூபேஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு ரத்த சக்கரை அளவு, ரத்த சோகை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்து கொடுத்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தி.மு.க பிரமுகர்கள் கிப்சன் மற்றும் சேவியர் ஆகியோர் ெசய்திருந்தனர்.

Tags:    

Similar News