உள்ளூர் செய்திகள்

சப்- கலெக்டர் சுப்புலட்சுமி, யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய போது எடுத்த படம்.

சிவகிரி அருகே மனுநீதி நாள் முகாமில் 29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-10-28 09:15 GMT   |   Update On 2022-10-28 09:15 GMT
  • விஸ்வநாதப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
  • முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சிவகிரி:

சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முன்னிட்டு கடந்த மாதம் 27-ந்தேதி விஸ்வநாதப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை போன்ற கோரிக்கைகள் அடங்கிய 52 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 29 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

முகாமிற்கு சங்கரன்கோவில் சப் -கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார் வரவேற்று பேசினார்.

முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விதவை உதவித்தொகை 9 பயனாளிகளுக்கும், முதி யோர் உதவி தொகை 14 பேருக்கும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 6 பேருக்கும் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு சங்கரன்கோவில் சப்-கலெக்டர் சுப்புலட்சுமி, வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதனை தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மூலமாக 2 பயனாளிகளுக்கு பனை மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக தலா 50 பனை விதைகளும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கவாத்து செய்யும் கருவியும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், மண்டல துணைத் தாசில்தார் சிவப்பிரகாசம், வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் திட்ட பிரிவு ஆணையாளர் ஜெயராமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி மயில், மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா, விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, சமூக பாதுகாப்பு திட்ட உதவியாளர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கர வடிவு, தேவி சத்யா, வேளாண்மை அலுவலர் கவுசல்யா, உதவி அலுவலர் கிருஷ்ண சங்கீதா, தோட்டக்கலைத்துறை சார்பாக உதவி இயக்குனர் ராஜா, விவேகானந்தன், முனீஸ்வரன், குணா, ஒன்றிய கவுன்சிலர்கள் கனகராஜ், முனியராஜ், கிப்சன், விக்னேஷ் ராஜா, மணிகண்டன், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News