உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை வழங்கினார். அருகில் கலெக்டர் சாந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் தருமபுரி எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பாப்பி ரெட்டிப்பட்டி கோவிந்தசாமி உள்பட பலர் உள்ளனர்.

தருமபுரியில் 20 பயனாளிகளுக்கு ரூ.12.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

Published On 2023-08-24 14:59 IST   |   Update On 2023-08-24 14:59:00 IST
  • வருவாய் துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.11.02 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா மற்றும் தொழிற்கல்வி உதவி தொகையினை வழங்கப்படடது.
  • 20 பயனாளிகளுக்கு ரூ.12.57 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வ பெருந்தகை வழங்கினார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடு தல் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்குக் குழு (2023-2024) தணிக்கை பத்திகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் குழு உறுப்பி னர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ண மூர்த்தி, ஈஸ்வரன், உதயசூரியன், சேகர், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.11.02 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா மற்றும் தொழிற்கல்வி உதவி தொகையினையும், மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.55 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் ரீடர் மற்றும் உதவித்தொகைகள் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.12.57 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வ பெருந்தகை வழங்கினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், தருமபுரி சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.பி.வெங்க டேஷ் வரன், பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, சேலம் சரக காவல் துறை துணை தலைவர் ராஜேஸ்வரி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்புச் செயலாளர் பாலசீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பிரியா, தருமபுரி மாவட்ட த்தில் பணிபுரியும் அனைத்து துறை தலைமை அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News