உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் பகுதி கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

Published On 2022-06-22 15:33 IST   |   Update On 2022-06-22 15:33:00 IST
சங்கராபுரம் பகுதி கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே மஞ்சபுத்தூர் காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்கள் முழங்க பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பித்தார் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர் கோவில், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

Tags:    

Similar News