உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கண்காட்சி வாகனம் வருகை

Published On 2023-02-14 14:54 IST   |   Update On 2023-02-14 14:54:00 IST
  • கண்காட்சி வாகனத்தை அரூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்..
  • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்கள்.

அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கண்காட்சி வாகனத்தை அரூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்..வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், அரூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர்.இளங ்கோ,போக்குவரத்துகழக தொழிற்சங்க நிர்வாகிகள் அசோகன், சேட்டு,காந்தி,பெருமாள், செந்தில்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்கள்.

தொடர்ந்து அரூர் பேருந்து நிலையம், மற்றும் முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தப்பட்ட இந்த வாகனத்தில் சாலை பாதுகாப்பு குறித்தும் விபத்தின்றி வாகனம் இயக்குவது குறித்த புகைப்படங்கள் மற்றும் விழிப்புணர்வு வீடியோ காட்சிகள் இயக்கி காண்பிக்கப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு வாகனம் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் பள்ளிகளுக்கு சென்றது அங்கு மாணவ,மாணவியர்கள் பார்வையிட்டனா்.

Tags:    

Similar News