- காரியாபட்டி அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்
- மாயமான கணேசனின் மனைவியை தேடி வருகின்றனர்
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள சிம்மாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). கூலி தொழிலாளி. இவரது மனைவி தனது 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு திடீரென மாய மாகிவிட்டார். அதுபற்றி கணேசன் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து குழந்தைகளுடன் மாயமான கணேசனின் மனைவியை ேதடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் மேலகரந்ைதயை சேர்ந்தவர் முருகேசன் (22). இவர் 3 வருடங்களுக்கு முன்பு கோவையில் வேலை பார்த்தார். அப்போது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார் அவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த பெண் தனது குழந்தையுடன் மாமியார் மற்றும் உறவினர்களுடன் சாத்தூர் வந்துள்ளார்.
சாத்தூர் பஸ் நிலையத்தில் குழந்தையை மாமியாரிடம் கொடுத்து விட்டு கழிப்பறைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்பு அவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. அவர் மாயமானது குறித்து முருகேசன் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சொக்கலாம்பட்டியை சேர்ந்தவர் காளிரத்தினம் (29). இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இவரது மனைவி பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வேலைக்கு சென்ற காளிரத்தினத்தின் மனைவி மாயமானார். அவர் மாயமானது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.