உள்ளூர் செய்திகள்

சிவகாசி வட்டாரத்தில் ேவளாண் திட்ட பயனாளிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சந்தித்து உரையாடினார்.

வேளாண் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-06-18 09:01 GMT   |   Update On 2023-06-18 09:01 GMT
  • வேளாண் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.
  • இயக்குநர் சுந்தரவள்ளி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத் தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன டைந்து வரும் பயனாளி களின் இருப்பிடத்திற்கு சென்று கலெக்டர் ஜெய சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி வடபட்டி கிராமத்தில் தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் மகாகனி மரக்கன்றுகள் பெற்று வளர்த்து வருவதையும், புதுக்கோட்டை ஊராட்சியில் உள்ள கம்பு விதை பண்ணையினையும், புதுக்கோட்டை கிராமத்தில் உணவு மற்றும் சத்து தானியங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுழற் கலப்பை மூலம் பயன்பெற்று வருவதையும் பார்வையிட்டார்.

பின்னர் செவலூர் கிராமத்தில் தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் நடவு செய்யப்பட்ட தேக்கு மரக்கன்றுகளையும், செவலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டு வளர்ச்சி துறை பண்ணை யும், நடையனேரி கிரா மத்தில் கோடைகாலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 100 ஏக்கர் கோவில்பட்டி-4 ரக சோளம் பயிரிடப்பட்டுள்ள (கே4 ரகம்) வயலினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவசாயி களுடன் கலந்துரையாடி, பயிர் வளர்ப்பு முறைகள், அரசின் மூலம் வழங்கப்படும் உதவிகள், மகசூல் உள்ளிட்ட வைகள் குறித்து கேட்ட றிந்தார்.

மேலும் பண்ணைக் கருவிகள், இதர பொருட்க ளான உளுந்து, நிலக்கடலை மினி கிட் மற்றும் பேட்டரி தெளிப்பான்களையும் கலெக்டர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் வேளாண்மை துணை இயக்குநர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) சுமதி, சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரவள்ளி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News