உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

Published On 2023-07-29 13:29 IST   |   Update On 2023-07-29 13:29:00 IST
  • வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படுகிறது.

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம்.வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப் பத்தை அலுவலக வேலை நாளில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.

இந்த உதவித்தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஏற்கனவே உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை யில்லை. வேலை வாய்ப்பற் றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்திருந்தால் அலுவலகம் வர தேவையில்லை.

இவ்வாறு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News