புதுப்பிக்கப்பட்ட கூட்டுறவு மருத்துவமனையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவனை மீண்டும் செயல்பட தொடங்கியது
- புதுப்பிக்கப்பட்ட தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவனை மீண்டும் செயல்பட தொடங்கியது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பழனிச்சாமி நாடார் சுகாதார கூட்டுறவு சங்கத்தின் மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 49 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி கடன், விவசாயக்கடன், மகளிர் சுய உதவிக்கடன் மற்றும் சிறுதொழில் கடன்களுக்கான அனுமதி ஆணைக்கடிதத்தை வழங்கினார்.
இதில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், மருத்துவமனை நிர்வாக தலைவர் பழனிசாமி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், பேரூர் செயலாளர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, மற்றும்கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் ஒரே கூட்டுறவு மருத்துவமனை என்ற சிறப்பு வாய்ந்த தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனைக்கு புத்துயிர் கொடுத்து பொலிவுடன் மீண்டும் செயல்பட வைத்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் பாராட்டினர்.