உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் மேகநாத ரெட்டி வழங்கினார்.

தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

Published On 2022-12-15 07:53 GMT   |   Update On 2022-12-15 07:53 GMT
  • தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
  • பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்கா நல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கிபல்வேறு துறைகள் சார்பில் ரூ.31 லட்சத்து 97 ஆயிரத்து 901 மதிப்பில் 131 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் செயல் படுத்திவரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

ஏழை-எளிய மக்கள் எவ்வித சிரமமுமின்றி நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும். இதற்காக மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கல்வியாளர்களாக உருவாக்கிட வேண்டும். கல்வி ஒன்றுதான் நிரந்தர சொத்து.

பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி களை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சிங்கராஜ், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) உத்தண்டராமன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கலுசிவலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News