உள்ளூர் செய்திகள்

உரிய ஆவணம் இல்லாமல் இயங்கிய ஆட்டோக்கள், வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-09-01 08:26 GMT   |   Update On 2023-09-01 08:26 GMT
  • உரிய ஆவணம் இல்லாமல் இயங்கிய ஆட்டோக்கள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
  • ராஜபாளையம் நகரில் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, முடங்கியார் சாலை, பஞ்சு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் திடீரென ஸ்ரீவில்லி புத்தூர் வட்டார போக்கு வரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணலதா,

ராஜபாளையம் காவல் துறை துணை கண்கா–ணிப் பளர் பிரீத்தி, விருதுநகர் ஆயுதப்படை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிகுமார், ஆகியோர் அதிரடியாக 'திடீர்' வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

உரிய ஆவணம் இல்லாத ஆட்டோக்கள், சரக்கு வேன் கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த வாக னங்களுக்கு ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் அபராதமாக விதிக் கப்பட்டது.

மேலும் ஆட்டோக்களில் அரசு விதிகளை மீறி அதிக அளவில் கல்லூரி மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து இருக்கையை விட அதிக மான அளவில் ஆட்களை ஏற்றக்கூடாது என அறி வுரை வழங்கினர்.

இது போன்ற திடீர் வாகன சோதனைகள் ராஜ பாளையம் நகரில் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியு றுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News