அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
- ஸ்ரீவில்லிபுத்தூர் 32-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
- சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாதபடி சிக்கலான சூழ்நிலை உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 32-வது வார்டு மடவார் வளாகம் பகுதிக்குட்பட்ட தன்யா நகர்பகுதியில் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, மற்றும் சாலை வசதிகள் பிரதான குறைகளாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 500 குடியிருப்புகள் இருக்கும் தன்யா நகருக்கு செல்வதற்கும் தன்யா நகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப்பகுதிக்கு செல்வதற்கும் ஒரே ஒரு பாதை வசதி மட்டுமே உள்ளது. தன்யா நகரில் சில இடங்களில் 20 அடி ரோடு வசதியும், பல தெருக்களில் 16 அடி அகலம் கொண்ட ரோடு வசதியும் மட்டுமே உள்ளது.
குறிப்பாக தன்யாநகர் உள்ளே நுழையும் சுமார் 50 அடி நீளமுள்ள பாதையில் அகலமானது 10 அடிக்கும் குறைவாக உள்ளதால் இந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தன்யா நகருக்கு இப்பாதையை தவிர்த்து வேறு ஒரு மாற்றுப் பாதை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தன்யா நகர் உட்புறம் உள்ள பாரதி நகர் மற்றும் குறிஞ்சி நகர் தெருக்களுக்கு பேவர் பிளாக், மின்கம்பம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. 500 குடியிருப்பு உள்ள இப்பகுதிக்கு தனியாக ரேஷன் கடை கோரிக்கையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.
பூங்கா மற்றும் உடற்பயிற்சி மைதானம் தேவை என்ற கோரிக்கையும், தன்யா நகர் பகுதி முழுவதிலும் சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாதபடி சிக்கலான சூழ்நிலை உள்ளதால் அதையும் சரி செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்துள்ளனர்.