உள்ளூர் செய்திகள்

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

Published On 2022-12-26 07:25 GMT   |   Update On 2022-12-26 07:25 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
  • தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள பணி யிடத்திற்கு சேவை செய்ய மற்றும் தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரிய விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நேரில் வந்து கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள வேண்டிய நபர்கள் நல்ல உடல் திறன் மற்றும் கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், வயது 18 முதல் 45 வயது உடையவராகவும், எந்தவித குற்றப்பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

சாதி, மதம், அரசியல் மற்றும் எந்தவித சங்கத்திலும் உறுப்பினராக இருக்க கூடாது. அரசு ஊழியராக இருந்தால் அவர்கள் தங்கள் துறைசார்ந்த அதிகாரியிடம் தடையில்லாச்சான்று பெற்று சமர்பிக்க வேண்டும். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊர்காவல் படையில் வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு காவல் துறையினரின் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். ஊர்காவல் படை வீரர்க ளுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும். அவ்வாறு பணிபுரியும் ஊர்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூ.560 வழங்கப்படும்.

நேர்முக தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கல்வி தகுதிக்கான அசல் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் இவைகளுக்குண்டான நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் புகைப்படம் அனைத்தும் எடுத்து வர வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News