உள்ளூர் செய்திகள்

மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டம்

Published On 2023-09-23 13:36 IST   |   Update On 2023-09-23 13:36:00 IST
  • அருப்புக்கோட்டை வழித்தடத்தில் மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • மாவட்ட கலெக்டர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை தெற்கு ரெயில்வே கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர், விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் திட்டத்தை கைவிடக்கூடாது என வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாஜனதா மாநில தலைவர் அண்ணா மலை விருதுநகர் வந்தபோது அந்த திட்டம் நிறைவேற்றப் படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலர் பணீந்திர ரெட்டி விருதுநகர், மதுரை மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு விருதுநகர் மாவட்டம் காரி யாபட்டி, அருப்புக்கோட்டை பகுதிகளில் 77 எக்டேர், மதுரை மாவட்டம் கள்ளிக் குடி, திருப்பரங்குன்றம், நிலையூர் பகுதிகளில் 15 எக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விருதுநகர் மாவட் டத்தில் 52 வருவாய்த்துறை அலுவலர்கள், தனி தாசில்தார்கள், மதுரை மாவட்டத்தில் 26 வரு வாய்த்துறை அலுவலர்கள், தனிதாசில்தார்கள் உள்பட 78 பேர் நியமனம் செய் யப்பட உள்ளனர். இவர்க ளுக்கான ஊதியம் மற்றும் இதர செலவினங்களை தெற்கு ரெயில்வே தமிழக அரசுக்கு வழங்கும்.

எனவே இந்த திட்டத் திற்கான நடவடிக்கைகளை உடனடியாக விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News