உள்ளூர் செய்திகள்

அதிகரிக்கும் போதை பொருட்கள் விற்பனை

Published On 2023-07-07 13:12 IST   |   Update On 2023-07-07 13:12:00 IST
  • அதிகரிக்கும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
  • பள்ளிகள், கல்லூரிகளின் அருகே கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை நடந்து வருவதாக புகார்கள் வருகின்றன.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் பள்ளிகள், கல்லூரிகள், கிராம பகுதிகளுக்கு சென்று போலீசார் போதைப் பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மேலும் பெட்டிக்கடைகள் மற்றும் கடை உரிமை யாளர்களின் வீடுகளில் புகையிலை, பான்மசாலா மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா? என தொடர்ச்சியாக சோதனை செய்து வருகின்றனர்.

அதில் கிலோ கணக்கில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக போதைப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளவர்களையும், விற்பனை செய்து வருபவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இருப்பினும் பள்ளிகள், கல்லூரிகளின் அருகே கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை நடந்து வருவதாக புகார்கள் வருகின்றன. இந்த நிலையில் பள்ளி, கல்லூரியின் அருகே உள்ள பகுதிகளில் தினமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், கடைகளில் தொடர்ச்சியாக சோதனை செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் போதைப் பொருட்களை வைத்திருப்போர், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News