- 2 வீடுகளில் புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெரிய ஓடைப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). இவர் சம்பவத் தன்று வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த காளியப்பன் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியை சேர்ந்தவர் ராஜசேகரன்(61). இவர் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகனை பார்க்க சென்று விட்டார். வீடு பூட்டியி ருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.