பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்
- பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகரிலுள்ள பி.ஏ.சி.எம் மேல்நிலைப் பள்ளி பி.ஏ.சி.ஆர் அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்தூர் சேவுக பாண்டியன் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டராஜா அரசு பள்ளி தலைமை ஆசிரி யர்கள் சிவக்குமாரி, காளி யப்பன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர்.
பின்னர் எம்.எல்.ஏ. கூறுகையில், முதல்-அமைச்சர் மாணவ மாண விகளுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மேலும் வளர்ச்சி அடையும். இந்த திட்டங்கள் அனைத்தையும் மாணவ மாணவியர்கள் சிறப்பாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடைந்து பள்ளிக்கும் ராஜபாளையம் தொகுதிக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து ராஜ பாளையம் எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் மேசை, பெஞ்சுகளை எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.