உள்ளூர் செய்திகள்
- வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த கணவர்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- இதுகுறித்து கண்ணன் ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
விருதுநகர்
வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரபாண்டிய புரத்தை சேர்ந்தவர் கண்ணன் (37). இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தும்பக்குளத்தை சேர்ந்த அழகர்சாமி கூறியுள்ளார். இதனை நம்பி வினோத் குமார் என்பவரின் வங்கி கணக்கில் கண்ணன் பணம் செலுத்தினார். அதன்பின் கண்ணன் கம்போடியா நாட்டிற்கு வேலைக்கு சென்றார். ஆனால் அங்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிய கண்ணன் பணத்தை திருப்பி தருமாறு அழகர்சாமியிடம் கேட்டார். ஆனால் அவர் பணத்தை தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மனைவி அருணா, வினோத்குமார், சாந்தி ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இதுகுறித்து கண்ணன் ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி அழகர்சாமி, அவரது மனைவி உள்பட 4 பேர் மீது கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.