உள்ளூர் செய்திகள்

விவசாயி-வாலிபர் தற்கொலை

Published On 2023-03-30 14:11 IST   |   Update On 2023-03-30 14:11:00 IST
  • வெவ்ேறு சம்பவங்களில் விவசாயி, வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் வடக்கத்தியான் (வயது 60). இவரது மனைவி சரஸ்வதி. குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஒரு தோப்பில் பூச்சி மருந்தை குடித்து வடக்கத்தியான் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

இது குறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (32). இவரது மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த தங்கப்பாண்டி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தங்கப்பாண்டியன் தந்தை பால்பாண்டி சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News