உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து விதிகள் குறித்த கண்காட்சி

Published On 2023-02-27 07:54 GMT   |   Update On 2023-02-27 07:54 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் போக்குவரத்து விதிகள் குறித்த கண்காட்சி நடந்தது.
  • இதற்கான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு கழக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி செய்திருந்தார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றம் ''போக்குவரத்து விதிகள்'' என்ற தலைப்பில் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் போக்குவரத்து விதிகள் அடங்கிய விளக்கப்படம், போக்குவரத்து சின்னங்கள் மற்றும் வண்ணங்களுடன் கூடிய போக்குவரத்து சிக்னல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் அபராதம், போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள், போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் ஆகிய விவரங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை கல்லூரி முதல்வர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 மாணவ-மாணவிகள் பார்வையிட்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு கழக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி செய்திருந்தார்.

Tags:    

Similar News