தி.மு.க. சார்பில் 2 இடங்களில் கோடைகால குடிநீர் பந்தல்
- தி.மு.க. சார்பில் 2 இடங்களில் கோடைகால குடிநீர் பந்தலை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தை மேம்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 10-வது நிகழ்ச்சியாக தி.மு.க. சார்பில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் ராஜபாளையம் சாந்தி தியேட்டர் அருகிலும், அரசு மகப்பேறு மருத்துவமனை அருகிலும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் கோடைகால குடிநீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன்,
நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் ஆகியோர் ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு பழங்களையும், குடிநீரையும் வழங்கினர். மேலும் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் நிழற்குடையையும் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த், கூட்டுறவு சங்க தலைவர் பாஸ்கர் மற்றும் கவுன்சி லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தை மேம்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பஸ்நிலையம் மூடப்பட்டு சிரமப்பட்டு வந்த சுற்று வட்டார கிராம பகுதி பயணிகளுக்கு அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே நிழற்குடையும், கோடைகால குடிநீர் பந்தலும் அமைத்து கொடுத்த தங்க பாண்டியன் எம்.எல்.ஏ.வை பொது மக்கள் பாராட்டினர்.