உள்ளூர் செய்திகள்

குடிநீர் திருடிய இணைப்புகள் துண்டிப்பு

Published On 2023-03-16 09:19 GMT   |   Update On 2023-03-16 09:19 GMT
  • ராஜபாளையம் அருகே குடிநீர் திருடிய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
  • செயல் அலுவலர் வெங்கடகோபு ஆய்வு செய்தார்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி 16-வது வார்டு முகவூர் ரஸ்தா கீழ்புறம் முறையற்ற போலி குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் திருடப்பட்டு வருவதாக புகார் வந்தது.

இதனையடுத்து செயல் அலுவலர் வெங்கடகோபு நேரடியாக களத்தில் இறங்கி முகவூர் ரஸ்தா பகுதியில் ஆய்வு செய்தார். அதில் முறையற்ற போலி குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் திருடி வருவது கண்டறியப்பட்டு பணியாளர்களால் உடனடியாக அந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

மேலும் முறையற்ற குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒருவார காலத்திற்குள் தாங்களாக முன்வந்து தங்களது முறையற்ற குடிநீர் இணைப்பினை துண்டிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு தொடர்ந்து துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.

மேலும் இழப்பீட்டு தொகை பல மடங்காக உயர்த்தி வசுலிக்கப்படும் என்று செயல் அலுவலர் வெங்கடகோபு எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின்போது குடிநீர் கட்டணம் செலுத்தாத 19 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

Tags:    

Similar News