உள்ளூர் செய்திகள்
மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் மீது வழக்கு
- மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- சார்பு ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட பகுதியில் சட்ட விரோதமாக அரசு அனுமதி இல்லாமல் மதுபானங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் கிருஷ்ணன் கோவில் குன்னூர் டாஸ்மாக் கடைக்கு எதிரில் பூவானியைச் சேர்ந்த தங்கபாண்டி, 144 மது பாட்டில்கள் அனுமதி இல்லாமல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது சார்பு ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ரமேஷ் தியேட்டர் அருகே ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த லட்சுமணன் அரசு அனுமதி இல்லாமல் 40 மதுபாட்டில் வைத்து இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் லட்சுமணன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.