- வாலிபர் மீது தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
- எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் இந்திரா காலனியை சேர்ந்தவர் கருத்தபாண்டி(வயது45). இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு அந்தப்பகுதியில் நடந்து வந்தார். அப்போது 2 நாய்களும் சண்டையிட்டு கடித்துக்குதறியது. இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் கருத்தபாண்டியை, ராம்குமார், அவரது தந்தை கனகராஜ், உறவினர் மாரிமுத்து ஆகியோர் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த கருத்தபாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் நாகராஜ்(வயது50). இவரிடம் அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டியை சேர்ந்த குருசாமி என்பவர் ரூ. 90 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அதனை அவர் திருப்பித்தரவில்லை. சம்பவத்தன்று அருப்புக்கோட்டைக்கு வந்த நாகராஜ் கடனை திருப்பித்தருமாறு குருசாமியிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குருசாமி, நாகராஜை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைது செய்தனர்.