உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

நகை இல்லாமல் பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு செய்ய கோரிக்கை

Published On 2023-11-18 08:02 GMT   |   Update On 2023-11-18 08:02 GMT
  • நகை இல்லாமல் பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் எடுத்துக் கூறினார். உழவன் செய லியை பதிவிறக்கம் செய்ய வும், அதன் பயன்பாடு குறித்து எடுத்துரைக்கவும் அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

தோட்டக்கலை துறையின் கீழ் இருக்கும் அனைத்து பண்ணைகளிலும் நன்றாக விளைந்த நாற்றாங்கால்கள் உரிய நேரத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மிளகாய் மற்றும் தக்காளி நாற்றுக்கள் பருவ காலத்தில் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் வருவாய் துறை அலுவலர்களால் வழங்கப் படும் அடங்கலுடன், ஒப்பம் செய்யப்பட்ட நகலும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கொப்பரைத் தேங்காய் உலர்த்தும் கருவி, வெட்டும் கருவி, மரம் ஏறும் கருவி ஆகியவற்றை மானி யத்தில் வழங்க வேண்டி அரசுக்கு பரிசீலனை அனுப்பப்பட உள்ளது என்றும் கூட்டுறவுத் துறை மூலம் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேவையான அளவில் யூரியா உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக் கப் பட்டது.

கூட்டுறவுத்துறையில் நகை இல்லாமல் பயிர்க் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு வழி வகை செய்யப்படும் என்று அவர் பதிலளித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண்மை இணை இயக்குநர் கோ.பத்மாவதி, மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News