உள்ளூர் செய்திகள்

ராஜபாளையத்தில் நடைபெற்ற விவசாய தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

விளம்பரத்திற்காக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார்-முத்தரசன் பேட்டி

Published On 2023-07-29 13:32 IST   |   Update On 2023-07-29 13:32:00 IST
  • விளம்பரத்திற்காக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார் என்று முத்தரசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
  • ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமிராஜா மண்டபத்தில் 13-வது விவசாய தொழிற்சங்க மாநாடு தொடங்கியது.

ராஜபாளையம்

ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமிராஜா மண்டபத்தில் 13-வது விவசாய தொழிற்சங்க மாநாடு தொடங்கியது. முன்னாள் எம்பி லிங்கம் வரவேற்றார். இந்திய விவசாயிகள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் குல்சார்சிங் கொரியா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் முத்தரசன் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தொழிலாளர் நலவாரியம் உள்ளது. வேளாண் துறைக்கு தனி அமைச்சகமும் பட்ஜெட்டும் தாக்கல் செய்வது வரவேற்புக்குறியது.

ஆனால் ஒரு கோடிக்கும் மேல் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு என தனி துறையோ, வாரியமோ இல்லை. கருணாநிதி ஆட்சியில் இருந்தது போல் விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் மாநாட்டில் கொண்டு வரப்பட உள்ளது.

100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்துடன் இணைத்து, ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்.எல்.சி. மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும் நிலத்தை கையகப்படுத்துவது மாநில அரசு தான். அறுவடை முடியும் வரை வாய்க்கால் வெட்டும் பணிகளை நிறுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

ராமேசுவரம் என்பது இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் இடம். அண்ணாமலை யாத்திரையை ராமேசு வரத்தில் தொடங்கியது மூலம் பா.ஜ.க.விற்கான முடிவுரை எழுதப்பட்டு விடும் என்பதை காட்டுகிறது. விளம்பரத்திற்காக அண்ணாமலை யாத்திரை செல்கிறார். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பில்லை.

கொடநாடு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னு பாண்டியன், தங்கமணி, பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News